September 21, 2026
தேசியம்
செய்திகள்

வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவு

கனடாவில் இந்த ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவாகின.

Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தது. Ontarioவில் 16,713 தொற்றுகளும் 15 மரணங்கள் பதிவாகின.

Quebec தொடர்ந்து நான்காவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது. Quebecகில் 16,46 தொற்றுகளுடன்13 மரணங்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

British Columbia 3,795 புதிய தொற்றுக்களையும் 3 மரணங்களையும் பதிவு செய்தது.

Albertaவில் வழக்கமான தொற்றின் அறிவிப்புகள் January 4 முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டது.

Manitoba 1,494 புதிய தொற்றுகளுடன் மீண்டும் ஒருமுறை அதன் அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு பதிவு செய்ததுடன் 5 மரணங்களையும் பதிவு செய்தது.

Saskatchewanனில் 735 தொற்றுகளும் பதிவாகின. New Brunswickகில் 682 தொற்றுகள் இரண்டு மரணங்கள் சுகாதார அதிகாரிகளால் பதியப்பட்டது.

தொடர்ந்து நான்காவது நாளாக Nova Scotiaவில் 500க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. Nova Scotiaவில் 618 தொற்றுகள் சுகாதார அதிகாரிகளால் பதியப்பட்டது.

Newfoundland and Labradorரும் 431 தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது. ஒரு மரணமும் அங்கு பதிவானது.

Prince Edward தீவு 175 தொற்றுகளுடன் மீண்டும் ஒரு நாளுக்கான அதிகபட்ச அதிகரிப்பை பதிவு செய்தது.

தவிரவும் Northwest Territories 42, Nunavut 38, Yukon 26 என தொற்றுக்களை பதிவு செய்தது.

கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 41,210 தொற்றுகள் பதிவாகின.

இந்த வருடத்தின் இறுதியுடன் கனடாவில் 2,183,527 தொற்றுகளும் 30,319 மரணங்களும் பதிவாகியுள்ளன.

விடுமுறை காரணமாக, இந்த வாரம் அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் தினசரி தொற்று எண்ணிக்கையை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

72 அமெரிக்க சதத்திற்கு மேல் உயர்ந்தது கனடிய டொலர்!

Lankathas Pathmanathan

Quebec வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் பலி – ஐவர் காயம்

Lankathas Pathmanathan

COVID காரணமாக கனடாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment