தேசியம்
செய்திகள்

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் நான்காவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது.

சனிக்கிழமை (31) நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் Sweden அணியை கனடிய அணி 5 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

தமது முதலாவது ஆட்டத்தில் Czech Republic அணியிடம் கனடிய அணி 5 க்கு 2 என்ற goal  கணக்கில் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடிய அணி 11 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் Austria அணியை கனடிய அணி 11 க்கு 0 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

கனடிய அணியின் அடுத்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை (02) Slovakia அணிக்கு எதிராக நடைபெறுகிறது.

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் கடந்த திங்கட்கிழமை (27) ஆரம்பமானது.

இந்தத் தொடர் எதிர்வரும்  5ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

Related posts

மத்திய அரசின் பற்றாக்குறை $13 பில்லியன்!

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில் எதிர்க்கட்சி!

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய பிரதமர் – மன்னர் சார்லஸ் விரைவில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment