September 8, 2026
தேசியம்
செய்திகள்

இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி

கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பமாகும் உலகக் கோப்பை தொடரில் கனடிய உதைபந்தாட்ட அணி G பிரிவில் போட்டியிடுகிறது.

இந்த தொடரில் கனடிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

உலக தரவரிசையில் 41வது இடத்தில் உள்ள கனடிய அணி 2ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை எதிர்வரும் புதன்கிழமை (23) எதிர்கொள்கிறது.

கனடிய அணியின் இரண்டாவது ஆட்டம் குரேஷியா அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையும் (27), முன்றாவது ஆட்டம் மொராக்கோ அணிக்கு எதிராக December 1ஆம் திகதியும் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் கனடிய உதைபந்தாட்ட அணி இரண்டாவது முறையாக பங்கேற்கிறது.

1986ஆம் ஆண்டு முதல் தடவையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி போட்டியிட்ட போது அந்த தொடரில் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது.

அதேவேளை இந்த உலகக் கோப்பை தொடருக்கு செல்லும் கனடிய ரசிகர்களுக்கு கனடிய அரசாங்கம் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

இந்த பயண ஆலோசனையில் பழக்க வழக்கங்கள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அடங்குகின்றன.

மது அருந்துவது தொடர்பான கத்தார் நாட்டின் கொள்கைகள் உட்பட, பயணிகள் கடைபிடிக்க வேண்டிய பிற கட்டுப்பாடுகளும் இதில் அடங்குகின்றன.

Related posts

குழந்தை கடத்தல் வழக்கின் குற்றவாளி நாடு கடத்தப்பட கூடும்?

Lankathas Pathmanathan

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு திருத்தந்தையிடம் வலியுறுத்தல்

பயங்கரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment