தேசியம்
செய்திகள்

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த வாகன விபத்தில் பார ஊர்தி ஓட்டுநர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகின

York பிராந்திய காவல்துறை புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை (27) இந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்த மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்.

கடந்த 12ஆம் திகதி மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மூன்று பேர் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முன் இருக்கையில் பயணித்த மூன்றாவது பயணியான 52 வயது பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் பலியானவர்களும் காயமடைந்தவர்களும் தமிழர்கள் எனவும் இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது.

Related posts

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் கனடாவிலும் பாதிப்பு!

Lankathas Pathmanathan

Latvia-வில் காணாமல் போன கனடிய இராணுவ உறுப்பினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment