தேசியம்
செய்திகள்

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவான் பயணம்

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

தைவான்-கனடா நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவராகவும் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Judy Sgro இந்த குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

இந்த குழுவில் தலா இரண்டு Liberal, Bloc Quebecois, Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கவில்லை.

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவான் பிரதமர் உட்பட முக்கிய சந்திப்புகளை முன்னெடுத்தனர்.

இந்த விஜயத்தை சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது ஒரு நடவடிக்கை என சீன அரசாங்கம் விமர்சித்துள்ளது.

Related posts

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்

Gaya Raja

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment