தேசியம்
செய்திகள்

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவான் பயணம்

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

தைவான்-கனடா நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவராகவும் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Judy Sgro இந்த குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

இந்த குழுவில் தலா இரண்டு Liberal, Bloc Quebecois, Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கவில்லை.

கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவான் பிரதமர் உட்பட முக்கிய சந்திப்புகளை முன்னெடுத்தனர்.

இந்த விஜயத்தை சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது ஒரு நடவடிக்கை என சீன அரசாங்கம் விமர்சித்துள்ளது.

Related posts

Ajax நகரசபை தேர்தலில் முதலாவது தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan

Markham இடைத் தேர்தல்: ஏழாம் வட்டாரத்தில் இதுவரை ஏழு வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment