தேசியம்
செய்திகள்

1957க்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்கொள்ளும் கனடா!

1957ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை கனடா எதிர்கொள்கின்றது.

பெரும்பாலும் புதிய குடியேற்றத்தால் இந்த வளர்ச்சி ஏற்படுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது.

கடந்த July 1ஆம் திகதி தரவுகளின் படி, கனடாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 38.9 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த April 1ஆம் திகதியில் இருந்து 0.7 சதவீதம் அதிகரிப்பாகும்.

புள்ளிவிவர திணைக்கள தரவுகளின் படி, சர்வதேச இடம்பெயர்வு இந்த வளர்ச்சியில் 94.5 சதவீதம் ஆகும்.

இந்த மதிப்பீடு, 1957ஆம் ஆண்டின் பின்னர் முதல் காலாண்டு வளர்ச்சியின் அதிகபட்ச வேகத்தைக் குறிக்கிறது.

இது நாளாந்தம் 3,100 பேருக்கு மேல் அதிகரிப்பைக் குறிக்கிறது.

Related posts

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja

இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Leave a Comment