தேசியம்
செய்திகள்

Conservative தலைமைக்கான வாக்களிப்பு முடிவடைந்தது

Conservative கட்சியின் தலைமைப் போட்டிக்கான வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.

கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.

கட்சியின் தலைமை வேட்பாளர் வாக்குச் சீட்டுகளை செவ்வாய்க்கிழமை  (06) மாலை 5 மணிக்குள் பெற வேண்டும் என்பது கட்சியின் முடிவாகும்.

இதன் மூலம் வாக்குச் சீட்டுகளை சரிபார்த்து கணக்கிட்டு இந்த வார இறுதியில் புதிய தலைவர்  அறிவிக்கப்படுவார்.

ஐந்து போட்டியாளர்களில் தனது அடுத்த நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க தரவரிசை வாக்குச் சீட்டு முறையை கட்சி பயன்படுத்துகிறது.

Pierre Poilievre, Jean Charest, Leslyn Lewis, Scott Aitchison, Roman Baber ஆகியோர் Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதில் வெற்றி பெறுபவர் Stephen Harper, Andrew Scheer, Erin O’Toole ஆகியோருக்குப் பின்னர் கட்சியின் நான்காவது நிரந்தர தலைவராக இருப்பார்.

அடுத்த தலைவர் Ottawaவில் சனிக்கிழமை அறிவிக்கப்படுவார்.

Related posts

திங்கள்கிழமை முதல் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படும் Toronto மற்றும் Peel பிராந்தியம்

Lankathas Pathmanathan

Quebec முதியவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசிகள் வழங்கல்

Lankathas Pathmanathan

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment