February 12, 2025
தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

கனடிய மத்திய வங்கி தனது  முக்கிய வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் புதன்கிழமை (07) உயர்த்தியது.

இதன் மூலம் 2.5 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக  முக்கிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது .

இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரித்துள்ளது.

பணவீக்கத்துடன் வங்கி தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த வட்டி விகித அதிகரிப்பு வெளியானது.

உக்ரைன் யுத்தம், COVID, கொந்தளிப்பான பொருட்களின் விலைகள் ஆகியவை பணவீக்கத்தின் முக்கிய இயக்கிகள் என மத்திய வங்கி கூறுகிறது.

இந்த நிலையில் விரைவில் மற்றொரு அதிகரிப்பை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

Related posts

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

நீட்டிக்கப்படும் தென்னாப்பிரிக்காவில் சிக்கியிருக்கும் பயணிகளுக்கு கனடாவின் பயண விலக்கு

Lankathas Pathmanathan

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

Leave a Comment