தேசியம்
செய்திகள்

Nova Scotia வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல் மீட்பு

திடீர் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட காணாமல் போன இரண்டாவது குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக Nova Scotia மாகாண RCMP செவ்வாய்கிழமை (25) தெரிவித்துள்ளது.

இந்த குழந்தையின் உடல் Brooklyn புறநகர் சமூகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சனிக்கிழமை (22) காணாமல் போன இரண்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை இது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னர் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போன மற்றொரு குழந்தையினது என்பதையும் RCMP உறுதிப்படுத்தியது.

இரண்டு குழந்தைகள், ஒரு இளைஞர், ஒரு பெரியவர் என நான்கு பேர் சனிக்கிழமை முதல் காணமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன 52 வயதானவரின் உடல் திங்களன்று புலனாய்வாளர்களால் மீட்கப்பட்டது.

காணாமல் போன இளைஞர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Related posts

நான்கு மாகாணங்களின் ஏழு தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்கள்?

Lankathas Pathmanathan

புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலத்தை முன்வைத்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment