September 14, 2026
தேசியம்
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

Hamilton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை Andrea Horwath செவ்வாய்க்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ontario மாகாணத்தின் முன்னாள் NDP தலைவரான Andrea Horwath செவ்வாயன்று Hamilton நகர முதல்வர் பதிவிக்கான தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு மாகாண அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் Horwath, பல ஆண்டுகள் Hamilton நகர சபை உறுரப்பினராக இருந்தவர்.

2009ஆம் ஆண்டு Ontario மாகாண NDP தலைவராக தெரிவு செய்யப்பட்ட Horwath, நான்கு தேர்தல்களை தலைவராக எதிர்கொண்டவர்.

கடந்த June மாதம் மாகாணசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, Ontario NDP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Horwath அறிவித்தார்.

Hamilton நகர முதல்வர் Fred Eisenberger மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Related posts

தெற்கு Ontarioவில் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவில் 168 Monkeypox தொற்றுகள் பதிவு

கனடாவின் பணவீக்க விகிதம் மிகப்பெரிய வருடாந்த வீழ்ச்சியை எதிர்கொண்டது!

Gaya Raja

Leave a Comment