தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (13) தனது முக்கிய வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது.

1998க்குப் பின்னரான அதி கூடிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும்.

இதன் மூலம் வட்டி விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவை மத்திய வங்கி எடுத்துள்ளது.

பணவீக்கத்தை அதன் இலக்கான இரண்டு சதவீதத்திற்குக் கொண்டு வருவதற்கு மிகவும் தீவிரமான அணுகுமுறையை இந்த முடிவு குறிக்கிறது.

பொருளாதார வல்லுனர்கள் வட்டி விகித உயர்வை 7.5 சதவீதமாக கணித்திருந்தனர்.

May மாதத்தில் கனடிய பணவீக்கம் 39 ஆண்டுகளில் இல்லாத அளவான 7.7 சதவீதத்தை எட்டியது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் June மாதத்திற்கான பணவீக்கத் தரவை எதிர்வரும் 20ஆம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இலையுதிர் காலத்தில் தேர்தலை கட்டாயப்படுத்த NDPக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan

சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பினர் !

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் அனு ஸ்ரீஸ்கந்தராஜா வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment