September 13, 2026
தேசியம்
செய்திகள்

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை உக்ரைனுக்கு வழங்கிய கனடா

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை கனடா உக்ரைனுக்கு உதவ உபயோகித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து கனடாவின் கையிருப்பில் இருந்து 375 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஜெனீவாவில் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச தீர்மானத்தை நிறைவேற்ற கனடாவின் சுகாதார அமைச்சர் உதவினார்.
உலக சுகாதார சபை கூட்டத்தில் கனடா உக்ரைனுடன் இணைந்து வழங்கிய தீர்மானத்திற்கு தேவையான வாக்குகளைப் பெற உதவும் வகையில் அமைச்சர் Jean-Yves Duclos இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

Lankathas Pathmanathan

இரண்டு வாரங்களுக்கு LCBO கடைகள் மூடப்படும்?

Lankathas Pathmanathan

தேர்தல் போட்டி தொடரும்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Chris Alexander

Lankathas Pathmanathan

Leave a Comment