September 14, 2026
தேசியம்
செய்திகள்

ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடாவிடம் ஒப்புதல் கோரும் Moderna

ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு Moderna, Health கனடாவிடம் கோரியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டால், கனடாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் COVID  தடுப்பூசி இதுவாகும்.

ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியை பரிசீலனைக்கு Health கனடாவிடம் வியாழக்கிழமை (28) சமர்ப்பித்ததாக Moderna கனடாவின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

Modernaவின் இந்த கோரிக்கையை வெள்ளிக்கிழமை (29)  Health கனடா உறுதிப்படுத்தியது.
Modernaவின் ஆறு முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி கடந்த March  மாதம் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடா இந்தியாவில் இருந்து குற்றவாளிகளை வரவேற்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment