தேசியம்
செய்திகள்

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரும் காவல்துறை

35 வயதான தமிழர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர்.

December 17 2021, Mississauga நகரில் வாகனம் மோதியத்தில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் மரணமடைந்தார்.

Markham நகரை சேர்ந்த இவர் வீதியை கடந்து தனது வாகனத்திற்கு செல்லும் போது வாகனம் ஒன்றினால் மோதப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் December 24 அன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இவரை மோதிய வாகனத்தின் சாரதி, அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

February 8. 1986இல் பிறந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் இலங்கையில் நுணாவில் மேற்கை சொந்த இடமாக கொண்டவர்.

2010ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த சுரேஷ் தர்மகுலசிங்கம் பார ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பார ஊர்தியை நோக்கி சென்று கொண்டிருந்த போது கருப்பு நிற 2008-2012 Ford Escape SUV வாகனத்தால் அவர் மோதப்பட்டார்.

சுரேஷ் தர்மகுலசிங்கம் தனது மனைவியை கடந்த Octoberரில் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தனது திருமணத்தின் பின்னர் அவர் December 11 கனடாவுக்குத் திரும்பியதாகவும், தனது புதிய மனைவியின் கனடிய வருகைக்கான விண்ணப்பத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவரது மைத்துனர் மனோத்குமார் செல்வராசா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் தர்மகுலசிங்கத்தை மோதிய வாகனத்தின் சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து காவல்துறையில் சரணடையுமாறு புலனாய்வாளர்களால்  ஊக்குவிக்கப்படுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல், கண்காணிப்பு காணொளி (surveillance video) அல்லது dashcam காணொளி இருப்பவர்கள், காவல்துறை அல்லது குற்றத் தடுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக வழக்கு விசாரணை அடுத்த வருடம் தொடரும்

Lankathas Pathmanathan

Huawei நிர்வாக அதிகாரிக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கைவிட்ட கனடா!

Gaya Raja

Leave a Comment