தேசியம்
செய்திகள்

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Kingston நகரில் உள்ள Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் முப்படைகளின் பயிற்சி பெறும் மாணவர்கள் நால்வர் கொல்லப்பட்டனர்.

வாகனத்துடன் தொடர்புடைய இந்த சம்பவம் Kingston Ontarioவில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் Jack Hogarth, Andrei Honciu, Broden Murphy, Andrès Salek என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford உட்பட பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த இழப்புகள்  குறித்து அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தேசிய பாதுகாப்புத் துறை  கூறியுள்ளது.

Related posts

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec பெண்ணுக்கு இரத்த உறைவு!

Gaya Raja

மேற்கு Ottawa வெடிப்புச் சம்பவங்களில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment