தேசியம்
செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியிடுவதாக அறிவிக்கவுள்ள Patrick Brown!

Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவித்தலை Brampton நகர முதல்வர் Patrick Brown எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளார்.

ஏற்கனவே முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn Lewis, சுயேச்சை Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber ஆகியோர் இதுவரை தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் Brown, ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொள்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், Ontario மாகாண எதிர்கட்சி தலைவருமான Brown ஞாயிறு காலை 11 மணியளவில் Bramptonனில் நடைபெறும் நிகழ்வொன்றில் இந்த அறிவித்தலை வெளியிடுவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, தான் கட்சி தலைமைக்காக போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்ட தமிழரின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment