September 12, 2026
தேசியம்
செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக கனடா பொருளாதார தடை

இரண்டு அரச சார்பற்ற கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்ததை கனடா வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
 ரஷ்யாவிற்கு எதிரான கனடாவின் முதல் சுற்று பொருளாதார தடைகளையும் பிரதமர் செவ்வாய்க்கிழமை (22) வெளியிட்டார்.
NATOவிற்கான கனடாவின் உறுதிப்பாட்டை வலுவூட்ட Latviaவிற்கு 460 கனடிய ஆயுத படைகளை அனுப்புவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவிரவும் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் Melanie Joly குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் மூலம் ரஷ்யா Minsk உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகவும் அமைச்சர்  கூறினார்.
உக்ரைனில் வசிக்கும் அனைத்து கனேடியர்களும் கனடா திரும்புமாறு கனடிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

Lankathas Pathmanathan

வர்ணனையாளர் Rex Murphy காலமானார்!

Lankathas Pathmanathan

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும்: Jason Kenney

Gaya Raja

Leave a Comment