தேசியம்
செய்திகள்

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட உள்ளதாக Conservatives கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Candice Bergen கூறினார்.
Conservatives கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியதை அடுத்து நடைபெற்ற தனிப்பட்ட வாக்கெடுப்பில் Bergen இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த தலைவரை வெற்றி பெற தயாராக இருக்கும் கட்சியுடன் விட்டுச் செல்வதே எனது குறிக்கோள் என  இடைக்கால தலைவராக முதலாவது அதிகாரப்பூர்வ அறிக்கையில் Bergen கூறினார்.

வியாழக்கிழமை (03) மாலை பிரதமர் Justin Trudeauவுடன் Bergen தொலைபேசியில் உரையாடினார்.

கனேடியர்களின் சார்பாக பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒன்றாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்த உரையாடலின் போது இருவரும் உறுதிப்படுத்தினர்.

Related posts

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

இறையாண்மை குறித்த வாக்கெடுப்புக்கு அழைப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment