September 12, 2026
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

COVID தடுப்பூசி பெறாத உறுப்பினர்கள் சிலரை கனடிய இராணுவம் பதவி விலக்கியுள்ளது.
தவிரவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்களின் பதவி விலகல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனேடிய ஆயுதப்படையின் ஐம்பத்தெட்டு முழு நேர உறுப்பினர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெற மறுத்ததற்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 246 பேருக்கு பதவி விலகளுக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் பரவலில் இருந்து ஆயுதப் படைகளை பாதுகாக்க அனைத்து இராணுவ உறுப்பினர்களும் October நடுப்பகுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற வேண்டும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த காலக்கெடு December நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது.

கனேடிய ஆயுதப்படையினரில்  98 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja

Leave a Comment