September 10, 2026
தேசியம்
செய்திகள்

வாகனம் மோதியதில் தமிழ் பெண் மரணம்

Mississaugaவில் வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) நிகழ்ந்தது.

தனியார் இல்லமொன்றில் இருந்து வெளியேறிய வாகனம் பெண் பாதசாரி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலியானவர் 56 வயதான நமிர்தலதா பாலசிங்கம் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இவர் இலங்கையில் இணுவில் கிழக்கை பிறப்பிடமாக கொண்டவராவார்.

செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் அவர் வாகனத்தின் அடியில் சிக்கி இறந்தார் என சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு படையினர் கூறினர்.

இந்த சம்பவத்தின் குறித்த தகவல்  தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

கனடாவிற்கு Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கும் Moderna

Lankathas Pathmanathan

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும் அறிவிப்பை புதன்கிழமை வெளியிடும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் வேட்பாளரானார்!

Lankathas Pathmanathan

Leave a Comment