தேசியம்
செய்திகள்

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

2019ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழரான சசிகரன் தனபாலசிங்கம் மீதான கொலைக் குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு September மாதம் 11ஆம் திகதி Scarboroughவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவரது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு எதிரான குற்ற விசாரணை 2022ஆம் ஆண்டு January மாதம் 10ஆம் திகதி Torontoவில் உள்ள குற்றவியல் உயர் நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ளது.

தர்ஷிகா ஜெகநாதன், இலங்கையில் மானிப்பாயையும், சசிகரன் தனபாலசிங்கம், முல்லைத்தீவையும் சேர்ந்தவர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நிகழ்ந்தது.

2017ஆம் ஆண்டு February மாதம் 27ஆம் திகதி தர்ஷிகா ஜெகநாதன் கனடாவை வந்தடைந்தார்.

Related posts

கனடாவை வந்தடைந்த முதலாவது COVID-19 தடுப்பூசி

Lankathas Pathmanathan

July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்

Gaya Raja

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment