தேசியம்
செய்திகள்

Toronto நகரின் புதிய முதல்வராக பதவியேற்ற Olivia Chow

Toronto நகரின் 66ஆவது முதல்வராக Olivia Chow புதன்கிழமை (12) பதவியேற்றார்.

புதனன்று Toronto நகர சபையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது Olivia Chow அதிகாரப்பூர்வமாக Toronto நகர முதல்வராக பதவியேற்றார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்களுக்கு பின்னர் Olivia Chow நகர முதல்வராக புதன்கிழமை பதவியேற்றார்.

66 வயதான அவர், Toronto நகரத்தை வழிநடத்தும் முதல் சிறுபான்மை நபர் ஆவார்.

Toronto நகரம் ஒன்றிணைந்த பின்னர் நகரத்தை வழிநடத்தும் முதல் பெண் இவராவார்.

இந்த தேர்தலில் 37 சதவீதம் வரையிலான வாக்குகளை Olivia Chow, 32 சதவீதமான வாக்குகளை Ana Bailao பெற்றனர்.

இந்த தேர்தலில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 372 வாக்குகளை Olivia Chow பெற்றார்.

Related posts

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment