September 7, 2026
தேசியம்
செய்திகள்

Alberta மாகாணத்திலும் புதிய குழந்தை பராமரிப்பு திட்டம்

Alberta மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளை மலிவு விலையில் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Jason Kenney ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2026ஆம் ஆண்டிற்குள் குழந்தை பராமரிப்புக்கு நாளாந்தம் 10 டொலர்கள் திட்டம் நிர்ணயிக்கப்படுகின்றன

இது குழந்தை பராமரிப்பு குறித்து மத்திய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை முறைப்படுத்திய எட்டாவது மாகாணமாக Albertaவை உருவாக்குகிறது

தற்போது, New Brunswick, Ontario, Northwest Territories, Nunavut ஆகிய மாகாணங்களும் பிரதேசங்களும் மாத்திரம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

30 பில்லியன் டொலருக்கான குழந்தை பராமரிப்பு திட்டத்தை Liberal கட்சி தமது இலைதுளிர் கால வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்டது.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 26 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் நியாயப்படுத்தினார்

Leave a Comment