தேசியம்
செய்திகள்

2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய குடிவரவாளர்களை கனடா வரவேற்றுள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டது.

1972ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான புதிய குடிவரவாளர்களை கனடா வரவேற்றுள்ளது.

கடந்த 16ஆம் திகதி கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டியது.

கனடிய அரசாங்கம் கடந்த இலையுதிர்காலத்தில் புதிய குடியேற்ற இலக்குகளை வெளியிட்டது.

2025 ஆம் ஆண்டிற்குள் வருடத்திற்கு 5 இலட்சம் புதிய குடியேறியவர்களை கனடா வரவேற்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts

ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிவடைந்தன!

Gaya Raja

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment