தேசியம்
செய்திகள்

Quebecகில் மறு வாக்கு எண்ணிக்கை: 12 வாக்குகளால் Liberal கட்சி வேட்பாளர் வெற்றி

கடந்த பொதுத் தேர்தலில் Liberal கட்சி 160 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Quebecகில் நிகழ்ந்த மறு வாக்கு எண்ணிக்கையின் பின்னர் மேலும் ஒரு தொகுதியை Liberal கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chateauguay-Lacolle தொகுதியில் Bloc Quebecois வேட்பாளரை விட 12 வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெற்று Liberal கட்சியின் Brenda Shanahan நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

இது Quebecகில் Liberal கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்கிறது.

ஆனாலும் Liberal கட்சியின் 160 நாடாளுமன்ற உறுப்பினர்களில் Torontoவின் Spadina Fort York தொகுதியின் வேட்பாளர் Kevin Vuong ஒரு சுயேச்சை உறுப்பினராக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வார்.

இந்தத் தேர்தலில் Justin Trudeauவின் Liberal கட்சி சிறுபான்மை அரசாங்கத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானது.

Related posts

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

Leave a Comment