September 27, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் வார விடுமுறையில் சந்திப்பு

கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் வார விடுமுறையில் மீண்டும் சந்தித்தனர்.

அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி அமுலுக்கு வரும் நாள் நெருங்கும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (16) சந்தித்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்புகளுக்கு பின்னர் Dominic LeBlanc, கனடாவின் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette ஆகியோர் வார இறுதி நாட்களை Washington மாநிலத்தில் கழித்தனர்.

காணொளி வாயிலாக நடைபெற்ற ஒரு மணி நேரச் சந்திப்பில் Dominic LeBlanc, Janice Charette, Jamieson Greer ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அது “ஆக்கப்பூர்வமானதாக” இருந்ததாகவும் ஞாயிறு மாலை Dominic LeBlanc செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“தத்தமது பேச்சுவார்த்தை குழுக்கள் மேற்கொண்ட பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்; பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என Dominic LeBlanc  செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புதன்கிழமை (19) 50 சதவீத இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கையெழுத்திட்டதிலிருந்து. கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு பதிலடியாகவே இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கர்கள் தெரிவித்தனர்.

Janice Charette, அவரது இணையான அதிகாரிக்கு இடையே பல நாட்களாக நடைபெற்ற விரிவான தொழில்நுட்ப விவாதங்களுக்குப் பின்னர் ஞாயிறு அன்று கூட்டம் நடைபெற்றதாக Dominic LeBlanc  அலுவலகம் தெரிவித்தது.

Donald Trump சுங்கவரி அச்சுறுத்தலுக்கு பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஐந்தாம் சந்திப்பு இதுவாகும்.

பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்ததாக கூறிய Jamieson Greer, புதிய சுங்க வரிகளை தவிர்க்க கனடா தனது பதிலடி நடவடிக்கைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பல தசாப்தங்களாக கனடாவுடன் அமெரிக்காவுக்குப் பெரிய அளவிலான வர்த்தக சவால்கள் இருந்து வருவதாக அவர் கூறினார்.

கனடா-அமெரிக்க பொருளாதார உறவுகள் குறித்த பிரதமரின் ஆலோசனைக் குழு, மாகாண, பிரதேச வர்த்தக அமைச்சர்களிடம் Dominic LeBlanc பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் இரு தரப்பினரும் ஓர் உடன்பாட்டை எட்டுவதிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றுவதாக Quebec பொருளாதார அமைச்சர் Bernard Drainville கூறினார்.

50 சதவீத இறக்குமதி வரிகள் புதனன்று நடைமுறைக்கு வந்தால், அதற்கான பதிலடி நடவடிக்கையை கனடிய அரசு தயார் செய்து வருவதாக பிரதமர் ஆலோசனை குழு குழுவின் உறுப்பினரான Erin O’Toole தெரிவித்தார்.

Related posts

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Lankathas Pathmanathan

கனடாவின் 4 பிரதான சர்வதேச விமான நிலையங்களில் தனியார் முதலீடு?

Lankathas Pathmanathan

அமெரிக்க செயல்படுத்தும் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு?

Lankathas Pathmanathan

Leave a Comment