தேசியம்
செய்திகள்

Newfoundland கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35வது ஆண்டு நிறைவு!

கனடாவின் Newfoundland மாகாண கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மெய்நிகர் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marco Mendicino, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, கப்பலில் வருகை தந்த தமிழர்களை கடலில் இருந்து காப்பாற்றிய Gus Daltonனின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

146 ஆண்கள், 4 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 155 தமிழர்கள் Newfoundland கரையில் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மிரட்டி பணம் பறித்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பலர் நாடு கடத்தப்படலாம்?

Lankathas Pathmanathan

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Quebec மாகாண சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து பேரணி!

Lankathas Pathmanathan

Leave a Comment