தேசியம்
செய்திகள்

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

கனேடிய பொருளாதாரத்தில் June மாதம் 230,700 புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது.

தொற்றின் பரவலை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளாவிய ரீதியில் விலத்தப்பட்ட நிலையில் புதிய வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் June மாதம் புதிதாக 263,900 பகுதி நேர வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை 33,200 முழுநேர வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் June மாதம் வேலையற்றோர் விகிதம் 7.8 சதவீதமாக சரிந்தது.

வேலையற்றோர் விகிதம் May மாதம் 8.2 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Latvia-வில் காணாமல் போன கனடிய இராணுவ உறுப்பினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

British Colombiaவில் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக 4,300 வீடுகள் வெளியேற்ற உத்தரவு!

Gaya Raja

Leave a Comment