தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள்

Ontarioவில் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை 1,588 புதிய தொற்றுக்களையும்  19 மரணங்களையும்  சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது March மாதம் 24ஆம் திகதிக்கு பின்னரான மிகக் குறைந்த தொற்றுக்களின் எண்ணிக்கையாகும். இதன் மூலம் ஏழு நாள்  சராசரி தொற்றுகளின் எண்ணிக்கை 2,183 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 2,370 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Ontarioவில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதன்கிழமை அவசரமற்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மாகாண அளவிலான இடைநிறுத்தம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related posts

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

Lankathas Pathmanathan

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment