தேசியம்
செய்திகள்

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Ontarioவில் வெள்ளிக்கிழமை முதல் தடவையாக 4,800க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவானது.மாகாண சுகாதார அதிகாரிகள் 4,812 தொற்றுக்களையும் 25 மரணங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் Ontarioவில் தொற்று எண்ணிக்கையின் ஏழு நாள் சராசரி இப்போது 4,292 ஆக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கபடுபவர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது. 659 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசிக்கின்றனர் என வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.

Ontarioவில் வியாழக்கிழமை 4,736, புதன்கிழமை 4,156,  செவ்வாய்க்கிழமை  3,670, திங்கட்கிழமை 4,401 என  தொற்றுக்கள் பதிவாகின. வெள்ளிக்கிழமையுடன் Ontarioவில் மொத்தம் 4 இலட்சத்து 8 ஆயிரத்து 338 தொற்றுகளும் 7ஆயிரத்து 664 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன் 3 இலட்சத்து  60 ஆயிரத்து 742  பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

Gaya Raja

Leave a Comment