தேசியம்
செய்திகள்

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

கனடாவில் COVID தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 11 இலட்சத்தை தாண்டியுள்ளது.கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 9,338 புதிய தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் வெள்ளிக்கிழமை பதிவாகின. Ontarioவில் 4,812, Quebecகில் 1,527, Albertaவில் 1,616, British Columbiaவில் 1,005, Saskatchewanனில் 221, Manitobaவில் 127, Nunavutரில் 12, New Brunswickகில் 9, Nova Scotiaவில் 6, Newfoundland and Labradorரில் 3 என தொற்றுக்கள் பதிவாகின.

Ontarioவில் 25, Quebecகில் 7, British Columbiaவில் 6, Saskatchewanனில் 2, Nova Scotiaவில் 1 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் 1,106,062 தொற்றுகளும், 23,541 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன், 997,202 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

Liberal கட்சி தோல்வி – இணைந்தன எதிர்கட்சிகள்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்

Lankathas Pathmanathan

Leave a Comment