September 11, 2026
தேசியம்
செய்திகள்

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Johnson & Johnson, COVID தடுப்பூசிகளின் முதலாவது விநியோகம் இந்த மாத இறுதியில் கனடாவை வந்தடையவுள்ளது.கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த மாத இறுதிக்குள் கனடா தனது முதலாவது Johnson & Johnson  தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமென பிரதமர்  Justin Trudeau கூறினார்

கனடா 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. மேலதிகமாக 28 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவில் இரத்த உறைவு  பக்க விளைவு காரணமாக   Johnson & Johnson தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து  Health  கனடா அவதானித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Johnson & Johnson தடுப்பூசிகள் Health  கனடாவினால் March மாதம் 5ஆம் திகதி பாவனைக்கு அனுமதிக்கப்பட்டது. 

Related posts

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக கனடாவிற்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

இந்த வாரம் காலாவதியாகிறது COVID தொற்று கால இரண்டு உதவித் திட்டங்கள்! !

Gaya Raja

Leave a Comment