September 9, 2026
தேசியம்
செய்திகள்

COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்து கனடாவில் கண்டுபிடிப்பு

COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மருந்து கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகக் Quebec ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகின்றது. Montreal இதய நிறுவனம் இந்தக்  கண்டுபிடிப்பை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 4,159 நோயாளிகள் ஈடுபட்டனர்.

Colchicine என்ற பெயர் கொண்ட இந்த வாய்வழி மாத்திரை ஏற்கனவே அறியப்பட்ட பிற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய வைத்தியர் Jean-Claude Tardif, இது ஒரு “பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு” எனக் கூறினார்.

ஆய்வின் பகுப்பாய்வில், Colchicine மருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்துள்ளது. அதேவேளை இறப்புகள் 44 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Gaya Raja

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க கனடா அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment