தேசியம்
செய்திகள்

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் (Canada Emergency Response Benefit – CERB) உதவி பெற்றவர்கள் 213,000 பேர் மீண்டும் பணத்தை செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

கனடா வருவாய் திணைக்களம் (Canada Revenue Agency – CRA) இது குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து 213,000 பேருக்கு CRA அறிவுறுத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளது. இவர்கள் இரண்டு தனி அரசு நிறுவனங்களில் CERB உதவித் திட்டத்தில் தவறாக கொடுப்பனவுக்கு விண்ணப்பித்திருக்கலாம் CRA கூறுகின்றது. தொற்றுக் காலத்தில் கடன்களை வசூலிப்பதை இடைநிறுத்தியுள்ள நிலையில் பணத்தை உடனடியாக மீண்டும் செலுத்த வேண்டிய தேவை இப்போது இல்லை என CRA கூறுகின்றது.

அதேவேளை பெருமளவில் வருமானம் பெறும் 100,000க்கும் அதிகமானவர்கள் CERB
உதவியை பெற்றுக் கொண்டதாக CRA கூறியுள்ளது.

 

 

Related posts

கறுப்பின கனேடியப் பிரிவுகள் எதிர்கொண்ட இனவெறிக்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 26 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

Carolyn Parrish vs Dipika Damerla: Mississauga நகரின் அடுத்த முதல்வர் யார்?

Lankathas Pathmanathan

Leave a Comment