கனடிய சுகாதாரச் சட்டத்தை பாதுகாக்க கனடிய பிரதமர் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது சுகாதாரத் துறையில் தனியார் மயமாக்கலை தடுத்து, கனடிய சுகாதாரச் சட்டத்தை பாதுகாக்க பிரதமர் Mark Carney முன்வர வேண்டும் என Ottawa-வில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கனடாவின் பொது சுகாதார அமைப்பில் அதிகரித்து வரும் தனியார் மயமாக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் Ontario, Quebec மாகாணங்களை சேர்ந்த போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (28) Ottawa நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவின் சுகாதாரத் துறை உடனடி ஆபத்தில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.
இந்த நிலையில் பொது மருத்துவக் காப்பீட்டைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
