Ontario மாகாணத்தில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்ற நோயாளிகள் சிகிச்சைக்காக சராசரியாக ஏறக்குறைய நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக புதிய வருடாந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு Ontario மாகாணத்தில் அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்ற நோயாளிகள் சிகிச்சைக்காக சராசரியாக 3 மணி நேரம் 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக Montreal பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வருடாந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது Ontario-வில் அவசர சிகிச்சைப் பிரிவு காத்திருப்பு நேரம் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
Ontario-வில் மிக நீண்ட காத்திருப்பு நேரம் கொண்ட முதல் 5 மருத்துவமனைகலீல் Ottawa நகரில் உள்ள Hôpital Monfort, Ottawa Hospital – General வளாகம், Sunnybrook சுகாதார அறிவியல் மையம், Kingston பொது மருத்துவமனை, Hamilton நகரில் உள்ள Juravinski மருத்துவமனை, Windsor பிராந்திய மருத்துவமனை Metropolitan வளாகம் ஆகியன அமைகின்றன.
April 2025 முதல் February 2026 வரையிலான காலகட்டத்தில் Toronto-வின் சராசரி காத்திருப்பு நேரம் 4 மணி நேரம் 10 நிமிடங்களாக இருந்தது.
இதில் Scarborough Centenary மருத்துவமனை Toronto-வில் மிகக் குறைந்த காத்திருப்பு நேரத்தை பதிவு செய்துள்ளது:
Ontario-வில் Durham பிராந்தியத்தில் South Bruce Grey Health Centre 1 மணி நேரம் 4 நிமிடங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
Toronto பெரும்பாக பகுதியில் Vaughan நகரில் உள்ள Mackenzie Health – Jane Street Site மருத்துவமனை 1 மணி நேரம் 20 நிமிடங்களுடன் மாகாண அளவில் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Quebec மாகாணத்தில் அதிகபட்சமாக 5 மணி நேரம் 12 நிமிடங்கள் காத்திருப்பு நேரம் பதிவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
