நினைவேந்தல் நாள் நிகழ்வில் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலித் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
Vancouver நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் பொது நிகழ்வின் போது, காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்த 34 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Vancouver நகரின் Victory சதுக்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவரது சந்தேகத்திற்கிடமான உடை காரணமாக இவர் அடையாளம் காணப்பட்டார்.
காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து போலித் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட 34 வயதுப் பெண்ணின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
British Colombia மாகாணத்தின் சட்ட நடைமுறைகளின் படி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை திகதி நிர்ணயிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைக் காவல்துறை பொதுவாக வெளியிடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
