கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை கால் புள்ளி உயர்த்தி 2.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
2023-ஆம் ஆண்டு July மாதத்தில் இறுதியாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த வட்டி விகித அதிகரிப்பு அறிவிப்பை புதன்கிழமை (28) வெளியிட்டார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள், பணவீக்கக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த அறிவித்தல் வெளியானது.
கடந்த மாதத்தில் கனடாவின் வருடாந்திர பணவீக்க விகிதம் 3.2 சதவீதமாக உயர்ந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய தேவை ஏற்படலாம் என செய்தியாளர்களிடம் பேசிய Tiff Macklem எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு எதிர்வரும் December 9-ஆம் திகதி வெளியாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
