கனடிய மத்திய அரசின் மிக முக்கியமான பொருளாதார சட்டமூலம் முதலாவது வாக்களிப்பில் வெற்றி பெற்று நிறைவேறியுள்ளது.
Bill C-39 எனப்படும் பொருளாதாரச் சட்டமூலம் வியாழக்கிழமை (08) வாக்களிப்பில் வெற்றி பெற்று முறைப்படி நிறைவேறியது.
இந்த சட்டமூலத்திற்கு Conservative கட்சி ஆதரவளித்து வாக்களித்தது.
296–26 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த சட்டமூலம் நிறைவேறியுள்ளது.
இன்றைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டமூலத்தை ஆரம்பத்திலேயே முடக்காமல் அடுத்தகட்ட தணிக்கைக்கு அனுப்ப Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த பொருளாதாரத் திட்டம் அடுத்தகட்ட ஆழமான தணிக்கை, சட்ட சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் Liberal அரசாங்கத்துடன் கைகோர்த்து இதற்கு ஆதரவாக வாக்களித்தது அரசியல் அரங்கில் ஒரு மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
