September 29, 2026
தேசியம்
செய்திகள்

மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்?

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Scott Aitchison பதவி விலக உள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் Scott Aitchison தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.

தனது பதவி விலகல் குறித்து அவர் கட்சியின் தலைவர் Pierre Poilievre-க்கு கடந்த வாரம் தெரிவித்ததாக தெரியவருகிறது.

இந்த பதவி விலகல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஆண்டில் Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சியை விட்டு விலகும் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

Ontario மாகாணத்தின் Parry Sound-Muskoka தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், Conservative கட்சியின் மிக முக்கியமான, செல்வாக்கு மிக்க மூத்த தலைவர்களில் ஒருவராவார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக Muskoka பகுதியின் நகர சபை உறுப்பினராக பணியாற்றிய Scott Aitchison உள்ளூர் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.

அவரது பதவி விலகலுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இருப்பினும் Conservative உட்கட்சி விவகாரங்கள் அல்லது மாகாண அரசியல் மாற்றங்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்தப் பதவி விலகல் மற்றொரு இடைத் தேர்தலுக்கு வழிவகுக்கிறது.

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தொடர்ந்து நடைபெறும் இடைத்  தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த புதிய இடைத் தேர்தல் குறித்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற Conservative கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் Scott Aitchison அதிகாரப்பூர்வமாகக் களம் இறங்கிப் போட்டியிட்டிருந்தார்.

தற்போதைய கட்சித் தலைவர் Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் போட்டியில், Scott Aitchison ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான நிலைய தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் Alghabra

Lankathas Pathmanathan

பொது சேவை ஊழியர் சங்கத்தின் முதலாம் நாள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிரான இணையவழி தாக்குதல் அபாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment