தேசியம்
செய்திகள்

தொற்றின் பரவல் காலத்தில் பொது தேர்தலா? எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கட்டும்: பிரதமர் Justin Trudeau

COVID தொற்றின் பரவல் காலத்தில் ஒரு பொது தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்

WE அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட Liberal அரசின் சர்ச்சைகளை விசாரிக்க ஓரு புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழுவை உருவாக்க Conservative கட்சி முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளது. Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole இதற்கான முன்மொழிவை செவ்வாய்கிழமை (20) நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். WE அறக்கட்டளை சர்ச்சையையும்,Liberal அர்சின் முறைகேடுகள் தொடர்பான பிற விசாரணைகளையும் விசாரிப்பதற்காக இந்த குழு செயல்படும் என O’Toole கூறினார்

ஆனாலும் இந்த முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பாக அமையும் என சிறுபான்மை Liberal அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, Liberal அரசாங்கம் அதை நம்பிக்கை வாக்கெடுப்பாக கருதும் என அரசாங்க சபைத் தலைவர் Pablo Rodriguez கூறினார்.

அதேவேளை இந்தக் குழுவை உருவாக்குவதன் மூலம் Conservative கட்சி நாட்டை ஒரு தேர்தலின் விளிம்பிற்கு தள்ளுவதாக சிறுபான்மை Liberal அரசாங்கம் குற்றம் சாட்டியது. Conservative கட்சியின் இந்த முயற்சியை ஒரு பக்கச்சார்பானது எனக் கூறிய Liberal கட்சியின் அவை தலைவர், அரசாங்கத்தை முடக்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார். இந்தக் குழு குறித்த முன்மொழிவு வாக்கெடுப்பில் NDPயின் ஆதரவு கிடைக்காவிட்டால் Liberal அரசாங்கம் ஆட்சி இழக்கும் அபாயமும் மீண்டும் தேர்தல் ஒன்று நடைபெறும் சாத்தியக்கூறும் தோன்றியுள்ளது.

Related posts

Ontarioவில் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்கள் வெளியீடு!

Gaya Raja

Ontario அரசாங்கம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளது!

Lankathas Pathmanathan

அடுத்த மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ; பசுமை கட்சியின் தலைவி!

Gaya Raja

Leave a Comment