தேசியம்
செய்திகள்

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது: Wall Street Journal செய்திக்கு கனடிய பிரதமர் மறுப்பு!

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இணை உறுப்பினராக மாறுவதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பு நாடாக (Associate Member) மாற்றப் பிரதமர் Mark Carney திட்டமிட்டு வருவதாக  Wall Street Journal ஞாயிற்றுக்கிழமை (13) செய்தி வெளியிட்டது.

இது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், ஞாயிறு இரவு அதற்கு Mark Carney முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கனடா தனது பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஐரோப்பியச் சந்தையை நோக்கி பாய்கிறது என்ற ஊகங்களை பிரதமர் நிராகரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை இலக்காகக் கொள்ளவில்லை என கூறிய Mark Carney, தற்போதைய பொருளாதாரச் சூழலில் மாற்று வழிகள் விவாதிக்கப்பட்டாலும் இணை உறுப்பினர் அந்தஸ்து கோரும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related posts

பிரதமரை கொலை செய்ய மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட Winnipeg நபர்?

Lankathas Pathmanathan

TikTok செயலி தடை குறித்த கட்சித் தலைவர்கள் நிலைப்பாடு

Lankathas Pathmanathan

November மாதம் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment