தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை மாற்ற Mark Carney திட்டம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ‘இணை உறுப்பினராக’ (Associate Member) கனடாவை இணைக்கும் புதிய திட்டத்தைப் கனடிய பிரதமர் Mark Carney முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியானது.

Wall Street Journal ஞாயிற்றுக்கிழமை (13) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இது கனடிய பிரதமரின் ஐரோப்பிய சந்தையை நோக்கிய அதிரடிப் பாய்வாக நோக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமின்றி, அதில் ஒரு இணை உறுப்பு நாடாக மாறுவதற்கான ஆலோசனைகளை பிரதமர் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் கனடியத் தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் முன்னுரிமையும், பாதுகாப்பான புதிய சந்தையும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கனடா முதலீட்டு மாநாடு திங்கட்கிழமை (14) ஆரம்பமாக உள்ள நிலையில்  இந்த செய்தி வெளியானது.

பிரதமரின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

 348 பேரை பதவி நீக்க CBSA முடிவு 

Lankathas Pathmanathan

Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை

Lankathas Pathmanathan

Humboldt Broncos பேருந்து விபத்தின் ஆறாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan

Leave a Comment