September 23, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய NATO பயிற்சியாளர் மீதான உளவு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

கனடிய NATO பயிற்சியாளர் மீதான உளவு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த Conservatives, Bloc Québécois கட்சிகள் வலியுறுத்துகின்றன.

NATO இராணுவ தலைமையகத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கனடிய முன்னாள் பயிற்சிப் பணியாளர் Biwei Zhang பயிற்சிப் பணியாளராக இருந்தார்.

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பெல்ஜிய நகரமான Mons-சில் உள்ள NATIO-வின் ‘ஐரோப்பாவிற்கான நேச நாட்டுப் படைகளின் தலைமை தலைமையகத்தில் ஒரு பயிற்சிப் பணியாளராக Biwei Zhang இருந்தார்.

இவருக்கு எதிரான உளவு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, நாடாளுமன்ற பொது பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு இரண்டு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், கனடாவின் தேசிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் உள்ளன என் Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Frank Caputo வியாழக்கிழமை (13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Biwei Zhang தற்போது பெல்ஜியத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இந்த வழக்கு கனடாவின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், Biwei Zhang ஏதேனும் கனடிய அமைப்புகளுக்காக பணியாற்றினாரா என்பது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிப்பார்கள் என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி முன்னர் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Saskatchewanனில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

உக்ரைன் – கனடிய பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் அனிதா ஆனந்தராஜன் வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment