தேசியம்
செய்திகள்

Brampton சட்டவிரோத உற்பத்தி மையத்திலிருந்து $1.5 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்?

Brampton நகரில் உள்ள சட்டவிரோத உற்பத்தி மையத்திலிருந்து $1.5 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Brampton நகரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு இடத்திலிருந்து, $1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருளைக் காவல்துறையினர் கைப்பற்றியதுடன், இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் ஒரு வணிக வளாகத்தில் வேறொரு விசாரணை தொடர்பாக தேடுதல் உத்தரவை நிறைவேற்றச் சென்ற போது, சட்டவிரோத கஞ்சா உற்பத்தி நடைபெறுவதை Toronto காவல்துறையினர் கண்டறிந்ததாக Ontario மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, தமது போதைப் பொருள் அமுலாக்க குழுவை விசாரணைக்கு அழைத்ததாகவும், Health கனடா மூலம் அங்கு செயல்படுவதற்கான பதிவுகள், உரிமங்கள் இல்லை எனவும் கண்டறிந்ததாகவும் OPP கூறியது.

அங்கு புலனாய்வாளர்கள், சுமார் 4,000 கஞ்சா செடிகள், 23 KG அதிகமான பதப்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவற்றைக் கைப்பற்றியதாக மாகாணக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் 43 வயதான Ha Van Thang, 38 வயதானVan Trieu Ngo ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

அங்கு முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளை தொடர்ந்து, அப்பகுதியில் பொதுப் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை என தீர்மானிக்கப்பட்டதாக OPP தெரிவித்தது.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் நடந்த வேண்டும்: Jagmeet Singh வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய NDP தலைவர்!!

Gaya Raja

Leave a Comment