September 14, 2026
தேசியம்
செய்திகள்

Niagara பிராந்தியத்தில் கடுமையான வெள்ள சேதங்கள்?

St. Catharines நகர குடியிருப்பாளர்கள், கடுமையான வெள்ள சேதங்களை எதிர்கொள்கின்றனர்.

பல நாட்களாக இந்தப் பகுதியை தொடர்ச்சியாக பலத்த மழை புயல்கள் தாக்கிய நிலையில் இந்த சேதங்கள் முறையிடப்படுகின்றன.

கடந்த 10 நாட்களில் St. Catharines நகர் மூன்று கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக 140 mm-க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

பலத்த மழை புயல்கள் காரணமாக Niagara பிராந்தியத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள் அவசர நிலையை அறிவித்தன.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

தனது நகரில் “சூறாவளிக்கு நிகரான” மழை பெய்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக St. Catharines நகர முதல்வர் Mat Siscoe தெரிவித்தார்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புயல்கள் நகரத்தின் உள்கட்டமைப்பை செயலிழக்கச் செய்து, வீடுகள், வணிக நிறுவனங்கள், நகர கடமைப்புகளை பாதித்த வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தின என நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

St. Catharines நகர வாசிகள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சேதங்களை எதிர்கொண்டு வருவதாக Mat Siscoe செவ்வாய்க்கிழமை (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இந்த நிலையை எதிர்கொள்ள மத்திய மாகாண அரசாங்கங்களின் இருந்து உதவி தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆதரவு வழங்கவும், மீட்பு பணிகளுக்கு உதவவும் தனது அரசாங்கம் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது என Ontario முதல்வர் Doug Ford திங்கட்கிழமை (03) மாலை ஒரு சமூக பதிவில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது..

Related posts

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

கனடாவில் விரைவில் தேர்தலா?

Gaya Raja

Leave a Comment