தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என வலியுறுத்தல்?

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என கோரியுள்ள Conservative கட்சி அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கனடா-அமெரிக்க உறவுகள் தொடர்பான Conservative கட்சியின் நிழல் அமைச்சர் Shuv Majumdar இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை ஒரு அவசரக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.

சர்வதேச வர்த்தகத்திற்கான நிலைக்குழுவின் அவசரக் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த வேண்டும் எனவும், இந்தக் கூட்டங்களின் போது அரசாங்கம் தனது எழுத்துப்பூர்வமான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் Shuv Majumdar தெரிவித்தார்.

Donald Trump அறிவித்த அண்மைய சுங்கவரி அச்சுறுத்தலை கனடிய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை Mark Carney விளக்க வேண்டும் எனவும் Shuv Majumdar வலியுறுத்தினார்.

பல கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரிகளை 30 நாட்களுக்குள் விதிக்க திட்டமிட்டுள்ளதாக Donald Trump அறிவித்துள்ள நிலையில், இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை கையாள்வதாக உறுதியளித்து பிரச்சாரம் செய்த Mark Carney, பின்னர் Donald Trump-பின் பல கோரிக்கைகளுக்கு பணிந்து விட்டதாக Shuv Majumdar குற்றம் சாட்டினார்.

Related posts

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு May 2026-இல்!

Lankathas Pathmanathan

FIFA: Round of 32 சுற்றில் கனடா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்!

Lankathas Pathmanathan

தொற்றின் காரணமாக 37 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment