தேசியம்
செய்திகள்

பிரதமருக்கு பெயர் பொறிக்கப்பட்ட துப்பாக்கி பரிசு?

கனடிய பிரதமர் துருக்கியின் ஜனாதிபதியிடமிருந்து ஒரு துப்பாக்கியை பரிசாகப் பெற்றார்.

NATO உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கனடிய பிரதமருக்கு துருக்கி ஜனாதிபதி ஒரு துப்பாக்கி பரிசு வழங்கியதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடிய அரசாங்கம் பரிசாக வழங்கப்பட்ட அந்த ஆயுதம் குறித்த விவரங்களை உடனடியாக வழங்கவில்லை.

NATO உச்சிமாநாட்டில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களுக்கும் துருக்கிய ஜனாதிபதி Recep Tayyip Erdoğan  துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியதாக தெரியவருகிறது.

துருக்கி ஜனாதிபதி வழங்கிய கைத்துப்பாக்கியை பிரதமர் Mark Carney தன் வசம் வைத்துக் கொள்ள மாட்டார் எனவும் தெரியவருகிறது.

அந்தத் துப்பாக்கிகளில் அவற்றைப் பெறுபவர் ஒவ்வொருவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றுடன் ஒரு பெட்டி தோட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தத் துப்பாக்கி செயலிழக்கச் செய்வதற்காக RCMP-யிடம் ஒப்படைக்கப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் துப்பாக்கியுடன் வழங்கப்பட்ட  தோட்டாக்கள்  துருக்கியில் இருக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

அனைத்து அதிகாரப்பூர்வ பரிசுகளும் கனடியச் சட்டங்கள், பாதுகாப்பு தேவைகள், அரசாங்கக் கொள்கைகளுக்கு அமைவாக கையாளப்படுகின்றன என வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

கனடாவின் நலன் முரண்பாடு குறித்த சட்டம் பிரதமர் உள்ளிட்ட அரச பதவியில் இருப்பவர்கள் $1,000-க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை தங்கள் வசம் வைத்திருப்பதை தடை செய்கிறது.

தவிரவும்  மரியாதை அல்லது நெறிமுறை அடிப்படையில் வழங்கப்படும் $200-க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை நலன் முரண்பாடு குறித்த ஆணையரிடம் அறிவிக்குமாறு இந்தச் சட்டம் கோருகிறது.

Aga Khan தனியார் தீவில் ஒரு ஆடம்பர விடுமுறையை பரிசாக  ஏற்றுக் கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர் Justin Trudeau சட்டத்தை மீறியதாக  நலன் முரண்பாடு ஆணையரால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.

தவிரவும் $200-க்கும் அதிக மதிப்புள்ள கண்ணாடிகளை நலன் முரண்பாடு குறித்த ஆணையரிடம் அறிவிக்க தவறியதற்காக பின்னர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை Ontarioவில் 3,000ஐ தாண்டலாம் !

Lankathas Pathmanathan

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment