தேசியம்
கட்டுரைகள்செய்திகள்

FIFA 2026 உலக தொடரும் கனடாவும் …..

கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற FIFA 2026 உலக உதைபந்தாட்ட கிண்ணப் போட்டி வியாழக்கிழமை (11) ஆரம்பமாகிறது.

உலகம் முழுவதிலுமிருந்து 48 நாடுகள், 1,248 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 104 ஆட்டங்கள் கொண்ட இந்தக் கண்ட அளவிலான போட்டி, June 11 ஆரம்பமாகி July 19 நிறைவடைகிறது.

இந்தப் போட்டிகள் வட அமெரிக்காவின் 16 நகரங்களில் நடைபெறும்.

கனடாவில் முதலாவது ஆட்டம் June 12 நடைபெறுகிறது.

Toronto நகரில் June 12 முதல் July 2 வரை BMO மைதானத்தில் ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளன.

BMO மைதானம் இந்தப் போட்டித் தொடர் நடைபெறும் காலம் முழுவதும் Toronto மைதானம் என மறு பெயரிடப்பட்டுள்ளது.

Vancouver நகரில் June 13 முதல் July 7 வரை ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன.

முந்தைய எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் தகுதி பெறத் தவறிய நிலையில், இது கனடாவின் இரண்டாவது தொடர்ச்சியான உலகக் கோப்பைப் பங்கேற்பாகும்.

கனடா இதுவரை ஆடிய ஆறு உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

FIFA 2026 தொடரில் B பிரிவில் கனடிய அணி போட்டியிடுகிறது.

கனடா Bosnia-Herzegovina, Qatar , Switzerland ஆகிய அணிகளுடன் B பிரிவில் போட்டியிடுகிறது.

அதன் குழுநிலை ஆட்டங்கள் மூன்றையும் கனடாவிலேயே கனடா விளையாடுகியது.

கனடாவின் தொடக்க ஆட்டம் Toronto-விலும், அடுத்த இரண்டு ஆட்டங்கள் Vancouverரிலும் நடைபெறும்.

இம்முறை கனடிய அணியின் முதலாவது ஆட்டம் Bosnia-Herzegovina அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை(12 ) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்த ஆட்டம் Toronto மைதானத்தில் நடைபெறுகிறது.

கனடிய அணியின் இரண்டாவது ஆட்டம் Qatar அணிக்கு எதிராக June 18 நடைபெறுகிறது.

கனடிய அணியின் மூன்றாவது ஆட்டம் Switzerland அணிக்கு எதிராக June 24 நடைபெறுகிறது.

கனடாவின் பிரதான நகரங்களில் இந்தப் போட்டிகளை பார்வையிடுவதற்கான நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2026 FIFA உலகக் கோப்பையின் பிரத்தியேக கனடிய ஒளிபரப்பு உரிமைகளை Bell Media நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

குடியேற்ற ஆர்ப்பாட்ட மோதலில் பத்து பேர் கைது

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

சீனா, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

Leave a Comment